நேற்று கேப்டன் பதவிக்கு தங்களுக்கு பிடித்த இரண்டு போட்டியாளர்களை சக போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் செய்தனர். இதில் பெரும்பாலோனோர் ஆரி, சோம், நிஷா ஆகியோரை சொல்ல அவர்கள் மூவரும் கேப்டன் பதவிக்கு போட்டியிடலாம் என பிக்பாஸ் அறிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் ஆரி வெற்றி பெற்றார்.
#Ramya from sofa rasichifying #Som 😌😌#Soya my shipping name🏃🏻🏃🏻#BiggBossTamil4
— Mira (@Mira2138) November 6, 2020
நாமினேஷன் நடைபெற்ற போது பாலாஜி, ரம்யா பாண்டியன், ரியோ ஆகியோரின் பெயர்களும் இதில் அடிபட்டன. ஷிவானி, சம்யுக்தா இருவரும் பாலாஜியை நாமினேட் செய்ய ரம்யா பாண்டியன் யாரும் எதிர்பாராத விதமாக சோமை நாமினேட் செய்தார். முன்னதாக சோம், ரம்யா பாண்டியனை நாமினேட் செய்திருந்தார்.
ஒரு மெலிதான காதல் இழையோடுகிறது. பேசாமல் பேசும் காதல் மிக அழகானது!
இது கரை சேருமா என்பது இருவர் மனதிலும் தான் இருக்கிறது.
BGM for this pair : காடு திறந்தே கிடக்கின்றது... From VasoolRaja MBBS.#BiggBossTamil4 #BiggBossTamil
— பிக் பாஸ் (@RP__Army) November 6, 2020
சோம் எதற்காக ரம்யாவை பரிந்துரை செய்தார் என்பதற்கு விளக்கம் கொடுத்து கொண்டிருந்த போது கேமரா ரம்யாவை காட்டியது. ரம்யா வழக்கம்போல சிரித்து கொண்டிருந்தார் என்றாலும் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் நேத்து தம்பின்னு கூப்டுட்டு இன்னைக்கு இப்படி ரெண்டு பேரும் மாத்தி, மாத்தி நாமினேட் பண்றீங்க என்னப்பா நடக்குது? என கிண்டலடித்து வருகின்றனர்.