சமூக வலைதளங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் அரிய புகைப்படங்கள் திடீரென வைரலாகி வருகின்றன.
பெரிய அளவில் மேக்கப் எதுவுமின்றி எதார்த்தமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இடம் பெற்றிருக்கும் அந்த புகைப்படங்களில் ரம்யா கிருஷ்ணனின் கைகளில் அவரது குடும்பத்தார் வளையல் மாட்டுகிறார்கள். அவரது இல்லத்தில் ஒரு முக்கியமான விசேஷத்தின்போது எடுக்கப்பட்ட throwback புகைப்படங்கள் தான் அவை.
80 மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் என ஒரு சகாப்தமாக இருக்கிறார் என்றே சொல்லலாம்.
கடந்த 2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை மணம் செய்துக் கொண்ட ரம்யா கிருஷ்ணன் பின்னர் சீரியல்களில் வலம் வந்தாலும், திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்தார்.
பின்னர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரம்மாண்ட படமான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் ராஜமாதாவாக வேறலெவலில் நடித்து, மாஸ் காட்டினார். இதேபோல் விக்னேஷ் சிவனின் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து அசத்தினார்.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவரது வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணன் அப்போது பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறாரே என கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.
ரம்யா கிருஷ்ணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.