ராம்சரண் & சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ பிரபல ஓடிடியில்…. எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிரஞ்சீவியின் சமீபத்தைய படமான ஆச்சார்யா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Ramcharan chiranjeevi aacharya OTT release date announced

Also Read | “நன்றி சிவகார்த்திகேயன்” “டைரக்டர் சார்… பெருமையா இருக்குடா…” சிஷ்யனைப் பாராட்டிய அட்லி!

அரசியலுக்குப் பின் சினிமா…

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்த சிரஞ்சீவி ஒரு கட்டத்தில் அரசியலுக்கு சென்றதால் சுமார் 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கைதி நம்பர் 150 என்ற படத்தில் நடித்தார். இந்த படம் விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். அந்த படத்துக்கு சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்திலும் நடித்தார்.

Ramcharan chiranjeevi aacharya OTT release date announced

ஆச்சார்யா ரிலீஸ்…

இதற்கிடையில் சிரஞ்சீவி தன்னுடைய மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள படம் ஆச்சார்யா. இந்த படத்தில் ராம்சரண் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதமே திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீஸானது.

Ramcharan chiranjeevi aacharya OTT release date announced

ஓடிடி வெளியீடு…

அதன்படி வெளியான ஆச்சார்யா  படம் பரவலாக வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. இதையடுத்து வெளியாகி ஒரு மாதத்துக்கு முன்பாகவே இந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைமில் வரும் மே 20 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக போஸ்டரை வெளியிட்டுள்ள அமேசான் ப்ரைம் “எல்லோரும் அவரை ஆச்சார்யா என அழைப்பார்கள். ஏனென்றால் அவர் எல்லோருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பவர்” எனக் கூறியுள்ளது.

Ramcharan chiranjeevi aacharya OTT release date announced

ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான RRR திரைப்படமும் அதே தேதியான மே 20 ஆம் தேதிதான் ஸ்ட்ரீம் ஆக உள்ளது என்பதால், ராம்சரண் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ramcharan chiranjeevi aacharya OTT release date announced

People looking for online information on Jr ntr, OTT Release, Ramcharan, RRR, SS Rajamouli will find this news story useful.