இயக்குனர் ராம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் ஆவார்.
கடைசியாக தமிழ்- மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. மலையாளத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இதுவரை இயக்குனர் ராம் 4 படங்களை இயக்கி உள்ளார்.
அவர் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் இன்று தமிழ் சினிமாவில் கல்ட் அந்தஸ்தை பெற்றுள்ளது. இரண்டாவது படமான தங்க மீன்கள் தேசிய விருதை வென்றது. மூன்றாவது படமான தரமணி திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல், இப்பொழுதும் சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் படமாக உள்ளது.
தற்போது தனது 5வது படமாக நிவின் பாலி- அஞ்சலி நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் குமார் கலை இயக்குனராக பணியாற்ற உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (04.10.2021) தனுஷ்கோடி கடற்கரையில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பு துவங்கும் முன் எடுத்த புகைப்படங்களை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
அஞ்சலி - நிவின்பாலி சம்பந்தப்பட்ட காட்சிகள் முதல் நாளில் படமாக்கப்பட்டது.
Our #VHouseProductions in #ProductionNo7 Started today in
Dhanushkodi wth all ur blessings... #DirectorRam @NivinOfficial @sureshkamatchi @thisisysr @yoursanjali @eka_dop@UmeshJKumar @Vetrikumaran7 @johnmediamanagr @NaganathaSethu3 pic.twitter.com/0CZ9mHG64G
— sureshkamatchi (@sureshkamatchi) October 4, 2021