தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசன், அடுத்தடுத்து பல விறுவிறுப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளிலும் பிக்பாஸ் வீட்டில் புது புது பிரச்சனைகள் உருவாகி வரும் நிலையில், நாளுக்கு நாள் நிகழ்ச்சி முழுக்க விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு மத்தியில், மாறி மாறி சில போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்ததும் சமீபத்திய எபிசோடுகளில் அதிகம் பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.
மேலும் முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, குடும்பத்தை பிரிந்து வாடுவதால், அவரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து அதன்படி செயல்பட்டிருந்தார். அதே போல, சாந்தியும் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.
அப்படி ஒரு சூழலில், தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் காரணமாக பல போட்டியாளர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் அரங்கேறி வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், ராம், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே பொம்மை டாஸ்க் மத்தியில் நடந்தது தொடர்பான விஷயம், இன்னும் பரபரப்பை தான் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகரித்துள்ளது. பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அணிகளாக பிரிக்கப்பட்டு பொம்மை டாஸ்க் நடைபெறுவதாக தெரிகிறது.
அப்போது, தனது கையில் இருக்கும் பொம்மையை உள்ளே கொண்டு வைக்க ராம் முயல்கிறார். ஆனால், வாசல் அருகே ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் அவரைத் தடுத்து நிறுத்துகின்றனர். அதிக உயரமுள்ள ராம், அவர்களை தள்ளி விட்டு உள்ளே செல்வேன் என்றும், அதனால் உள்ளே விடுங்கள் என எச்சரிக்கவும் செய்கிறார். ராம் உயரமாக இருக்கிறார் என்பதையும் தாண்டி, கேம் மற்றும் டாஸ்க் என்பதால் எப்படி இருந்தாலும் உள்ளே விட மாட்டோம் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர்.
அவர்களை விலக்கி விட்டு உள்ளே செல்ல ராம் முயன்றாலும் தொடர்ந்து தங்களின் பலத்தை ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.