www.garudavega.com

RC15: ராம் சரணின் மிரட்டலான லுக்கில் தமிழில் வெளியான FIRST LOOK போஸ்டர்..! இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Game Changer படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Ram Charan Shankar Game Changer Movie First Look Poster

Images are subject to © copyright to their respective owners.

Also Read | PS2: பொன்னியின் செல்வன் - 2.. படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! செம்ம   

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தினையும் ஒரு சேர இயக்கி வருகிறார்.

கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Ram Charan Shankar Game Changer Movie First Look Poster

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. ஒரு பாடல் காட்சி நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றது.

Ram Charan Shankar Game Changer Movie First Look Poster

Images are subject to © copyright to their respective owners.

பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை இந்த படத்தின் டைட்டில் 'Game Changer' என அறிவிக்கப்பட்டது.  

Ram Charan Shankar Game Changer Movie First Look Poster

Images are subject to © copyright to their respective owners.

இன்று மாலை இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் மீது ராம்சரண் அமர்ந்து இருக்கும் புகைப்படத்துடன் போஸ்டர் அமைந்துள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் எழுத்தாளராக பணிபுரிகிறார். போஸ்டரில் பாடலாசிரியர் விவேக், நடன இயக்குனர்கள் பிரபு தேவா, ஜானி, சாண்டி பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | அஜித் வீட்டிற்கு நேரடியாக சென்ற சூர்யா & கார்த்தி.. தந்தை மறைவுக்கு துக்கம் விசாரிப்பு!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ram Charan Shankar Game Changer Movie First Look Poster

People looking for online information on Game Changer Movie, Game Changer Movie First Look Poster, Ram Charan, Shankar will find this news story useful.