ஷங்கர் - ராம் சரண் இணையும் RC 15 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற ஒப்பந்தமாகி உள்ளார். ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்.
இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
Rc 15 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ராம்சரனின் 15வது திரைப்படமாகும். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு 50வது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமன் பிறந்த நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது.
இந்நிலையில் இன்று (05.05.2022) முதல் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கியுள்ளது. படப்பிடிப்புக்கு ராம் சரண் காரில் இருந்து வந்திறங்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/