அனிருத் இசையில் தளபதி விஜய்யின் நடித்துள்ள 'மாஸ்டர்' பட பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் டிக்டாக் உள்ளிட்டவற்றில் செம வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் இந்த பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் இந்த படத்தில் வாத்தி கமிங் பாடலுக்கு டோலிவுட் நாயகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆடுவது போல் எடிட் செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாஸ்டர்' படத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். மேலும் மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆண்டரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
Youtube link : https://t.co/n1I3zu7mkR
— Ranga Ramanuja (@RangaRamanuja_) April 14, 2020