தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும். அடுத்தடுத்து டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.
இதற்கு மத்தியில், கடந்த வார இறுதியில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் எலிமினேட் ஆகி இருந்தனர். இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியான ராம், Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்ய கருத்துக்களை ராம் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது PR குறித்து பிக்பாஸ் வீட்டில் தான் பேசியது பற்றியும் ராம் விளக்கம் அளித்திருந்தார்.
பிக்பாஸ் வீட்டில், இந்த சீசன் ஆரம்பமான ஒரு சில வாரங்களில், போட்டியாளர் ராம் குறித்து சக போட்டியாளர்களான மணிகண்டா, ADK, மகேஸ்வரி, கதிரவன் உள்ளிட்டோர் ராம் வெளியே ப்ரோமோஷன் செய்ய PR டீமுக்கு கொடுத்த பணம் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, 15 லட்சம் வரை ராம் செலவு செய்திருப்பார் என்றும், தன்னை பற்றி அடிக்கடி நிறைய பதிவுகளை பகிர அத்தனை பணம் அவர் செலவு செய்திருப்பார் என்றும் பேசிக் கொண்டிருந்தனர்.
நடுவே வரும் ராமிடம், அவர்கள் PR டீமுக்காக 10 லட்சம் வரை செலவு செய்தாயா என கேட்க, தான் செலவு செய்தது உண்மை தான் என்றும் கூறுகிறார். அப்போது 3 லட்சம் வரை செலவு செய்தாயா என கேட்க, பதில் சொல்லாமல் கிளம்பி செல்கிறார் ராம். PR க்காக பணம் செலவு செய்தது உண்மை தான் என ராம் கூறிய விஷயம், அதிகம் பேசுபொருளாக மாறி இருந்தது.
இதுகுறித்து தற்போது பேசிய ராம், "எனக்கு பொய் சொல்ல தெரியாது. நான் மனசுல தோணுறத பேசிருவேன். இப்போ இருக்கிற எல்லா போட்டியாளருக்குமே சோசியல் மீடியா, பேஸ்புக்ல மேனேஜ் பண்றதுக்கு ஒரு ஏஜென்சி இருப்பாங்க. இல்லன்னு சொன்னா அது பொய். அப்படி இருக்கிறப்ப நம்ம அவங்களுக்காக ஏதாவது பணம் கொடுக்கணும். நான் இல்லாதப்ப நீங்க எனக்காக பாத்துக்குறிங்க. Vote for Ram, Support Ram அப்படின்னு போஸ்ட் எல்லாம் போடுவாங்கல்ல, நம்ம போட்டோஸ் எடுத்து போடுறது, கட் பண்ணி வீடியோஸ் எல்லாம் போடறது, அததான் நான் PRன்னு சொல்லி இருந்தேன்.
எனக்கு இந்த சோசியல் மீடியா எல்லாம் அந்த அளவுக்கு பழக்கம் இல்ல. நான் பிக் பாஸ் வரதுக்கு முன்னாடி ஒரு 3 ஆயிரம் ஃபாலோயர்ஸ் தான் இருந்தாங்க. எனக்கு இப்பதான் ஏறி இருக்கு. நான் பெருசா ஆக்டிவாவும் இருந்ததில்லை. அப்ப எனக்கு தெரிஞ்ச ஃப்ரண்டு ஒருத்தர் ஏஜென்சி வச்சிருக்கார் அவர்கிட்ட தான் நான் கொடுத்துட்டு போனேன். அவர்கிட்ட நிறைய பேர் வேலை பாக்குறதுனால நான் அவங்களுக்கு பணம் கொடுத்து தான் ஆகணும். அந்த அர்த்தத்தில் தான் நான் சொன்னேன். ஆனா இவ்ளோ பெரிய விஷயம் ஆகும்ன்னு நான் எதிர்பார்க்கல" என ராம் தெரிவித்துள்ளார்.
அதேபோல தான் முதல்முறையாக இப்படி சோசியல் மீடியாவில் பிரமோஷன் செய்வதால் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது தனக்கு தெரியாது என்றும் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் முழு தொகையை தருகிறேன் என்றும் பேசி இருந்ததாக ராம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.