உடலை படு ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் இளைஞர்கள் பலருக்கு ரோல் மாடலாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத். தன் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்.
சோஷியல் மீடியாவில் மட்டுமல்லாமல் இண்டர்வ்யூக்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நச்சென்று பதில் சொல்லி பலருடைய மனதை வென்றெடுத்தவர்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று அவர் மகிழ்ச்சியுடன் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, ' சில சமயம் வார்த்தைகளில் சொல்ல முடியாததை ஒரு ஃபோட்டோவில் எளிதாகச் சொல்லிவிடலாம்.
எனது இன்ஸ்டா குடும்பம் இப்போது 1.4 கோடி அன்பர்களை கொண்டதாக வளர்ந்து விட்டது. இதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியாது . எனவே நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த தருணத்தின் பல்வேறு மனநிலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் நிறைய அன்பையும் பாசிட்டிவிட்டியையும் அனுப்புகிறேன்’ என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ரகுல் ப்ரீத்தின் இந்த இன்ஸ்டா பகிர்வு அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் நெட்டிசன்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டது