பலூன் டாஸ்க், காயின் டாஸ்க், பால் பண்ணையில் பால் சேகரிக்கும் செண்பகமே செண்பகமே டாஸ்க் ஆகியவற்றைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன், என அடுத்தடுத்த டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் கடைசியாக நடந்த செண்பகமே செண்பகமே டாஸ்கில், ராஜூ நன்றாகவும், ஆக்டிவாகவும் விளையாண்டதாகவும், ஆனால் ராஜூ பொதுவாக பிக்பாஸ் வீட்டுக்குள் அவ்வாறெல்லாம் விளையாட மாட்டார் என்று நினைத்ததாகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
அனைவரின் யூகத்துக்கும் ஒரு காரணம் உண்டு. ஏனென்றால் ராஜூ, பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மத்தியில் அவ்வப்போது மிமிக்ரி, குத்துச்சண்டை, சிறப்பு பேச்சுகள் என பேசி பெர்ஃபார்ம் செய்து எண்டர்டெயின் பண்ணுவார். எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே, காமெடியாக அணுகும் ராஜூ, நிகழ்ச்சிக்குள் வைக்கப்பட்ட கிராமத்து டீம் vs நகரத்து டீம் பட்டிமன்றத்திலும் கிராமத்தின் பக்கம் நின்று கலகலவென பேசினார்.
எதிரணியில் இருப்பவர்களும் ஸ்போர்டிவாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு தான் ராஜூவின் பேச்சு எதார்த்தமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். இந்நிலையில், தற்போது புதிய லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் விளையாடுவதற்கு புதுவிதமான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தான் காப்பாற்ற நினைக்கும் போட்டியாளரின் பெயர் ஒட்டப்பட்ட பொம்மையை தூக்கிக்கொண்டு, போட்டியாளர்கள் கூடாரத்துக்கு ஓட வேண்டும்.
கடைசியாக வரும் போட்டியாளரின் கையில் இருக்கும் பொம்மையில் எழுதப்பட்ட பெயருக்குரிய போட்டியாளர் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவார். ஆனால் விதிப்படி ஒரு போட்டியாளர் தன் பெயர் எழுதி ஒட்டப்பட்ட பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடக்கூடாது.
எனினும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் “நான் உன்னுடைய பொம்மையை எடுத்துக்கொள்கிறேன். நீ என்னுடைய பொம்மையை எடுத்துக்கொள்” என முன்பே பேசி வைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் ராஜூ எடுத்துக்கொண்டு ஓடிய பொம்மையை கடைசியாக ராஜூ பார்க்க, அதில் இருந்தது தன் பெயர் தான் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, “அடப்பாவிகளா.. என் பெயர் எழுதப்பட்ட பொம்மையை யாருமே எடுக்கலயே” என்று புலம்பத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இதற்கு முடிவு சொன்னதுடன் மீண்டும் விதிகளை நினைவுபடுத்திய பிக்பாஸ் இந்த ரவுண்டு செல்லாது என்று அறிவிக்க, ராஜூ மீண்டும் குஷியாகி விளையாடத் தொடங்கிவிட்டார்.