பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லும் டாஸ்கில், அக்ஷரா மற்றும் பிரியங்கா இரண்டு பேர் கதை சொல்லி இருந்தனர்.
முன்னதாக அக்ஷரா கதை சொல்லும் பொழுது, தான் சொகுசான ஒரு வீட்டில் பிறந்து வளர்ந்ததாகவும், கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத தன்னுடைய வாழ்க்கையில் தன் முதல் ஹீரோ தந்தைதான் என்றும், விபரம் தெரியாத வயதிலேயே அவருடைய மரணம் நிகழ்ந்து விட்டதாகவும் மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.
இதேபோல் தன்னுடைய இரண்டாவது ஹீரோ தன்னுடைய அண்ணன் என்றும், வீட்டுக் கஷ்டம் எதுவுமே தெரியாத அளவுக்கு அண்ணன் தன்னுடைய தந்தை போல் தன்னை வளர்த்ததாகவும் அக்ஷரா குறிப்பிட்டிருந்தார். மேலும் மாடலிங் துறையில் பணிபுரியும் தான் மக்களிடம் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக பிக்பாஸிற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அக்ஷராவின் இந்த கதையை கேட்டு பலரும் இம்ப்ரஸ் செய்யவில்லை என்றும், கதை எந்தவிதமான மேடு பள்ளமும் இல்லாமல் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதேபோல் பிரியங்கா குறிப்பிடும்போது, “அக்ஷராவின் கதையில் அவள் என்ன செய்தாள் என்பது இல்லை. அவளுக்கு கிடைத்தது மட்டுமே இருக்கிறது. அவளுக்கு எல்லாமே கிடைத்து விட்டது என்பது இருக்கிறது. அதனால்தான் அவளை மோட்டிவேட் செய்ய டிஸ்லைக் கொடுத்தேன்!” என்று கூறினார்.
முன்னதாக எல்லாரும் டிஸ்லைக் கொடுத்தால் அக்ஷராவின் மனம் காயப்படும் என்று, தான் அவருக்கு லைக் கொடுத்து இருந்ததாக அக்ஷராவிடம் கூறிய ராஜூ, அதன்பிறகு பிரியங்கா கதை சொல்லும் பொழுது கொடுத்திருந்த விஷயம்தான் பரபரப்பாகி இருக்கிறது. ஆம், அக்ஷராவுக்கு பிறகு பிரியங்கா கதை சொல்லத் தொடங்கினார்.
பிரியங்கா கதை சொல்லும்போது தன்னுடைய தந்தையின் மரணம், தொடர்ந்து தன்னுடைய தாய் தங்களை வளர்த்தது உள்ளிட்ட பலவற்றையும் கூறி.. “பிடிக்குதோ.. பிடிக்கவில்லையோ ..யாரேனும் ஒருவர் உதவி செய்திருந்தால் தன்னுடைய தந்தை பிழைத்து இருக்கக்கூடும். நான் அந்த பாகுபாடு பார்க்காமல் எல்லாருக்கும் உதவி செய்யும் இடத்தில் இருப்பேன்.” என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது விஜேவாக உருவெடுத்திருக்கும் பிரியங்கா தன்னுடைய முழு கதையை மேற்கண்டவாறு சொல்லி முடித்துவிட்டு, “கதை பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்..” என்று காமெடியாக முடித்தார். இதைக் கேட்ட பலரும் பிரியங்காவின் கதை இன்ஸ்பிரேஷனாக இல்லை. ஆனால் கேட்பதற்கு ஜாலியாக சுவாரசியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இமான் அண்ணாச்சி பிரியங்காவின் கதைக்கு லவ் கொடுத்திருந்தார். மற்றவர்கள் லைக் மற்றும் டிஸ்லைக் கொடுத்திருந்தனர். அப்போது பிரியங்காவிடம் “அக்ஷரா விஷயத்தில் நீங்கள் சொன்னதை நான் இப்போதுதான் யோசித்துப் பார்க்கிறேன். கதை நன்றாக இல்லாவிட்டாலும், நமக்கு பிடித்தவர்களை கஷ்டப்படுத்த கூடாது என்று சொல்லி லைக்ஸ் கொடுத்தால் அவர்கள் வளர முடியாது. அவர்கள் அதை ஊக்கமாக எடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவாவது நாம் டிஸ்லைக் கொடுக்க வேண்டும்” என்பது போல் கூறிவிட்டு, அது பிரியங்கா அக்ஷரா விஷயத்தில் தனக்கு கொடுத்த அட்வைஸ் என்றும் அதை உள்வாங்கி பிரியங்காவுக்கு அதே டிஸ்லைக்கை தருவதாகவும் ராஜூ குறிப்பிட்டார்.
அதன் பிறகு இது குறித்து பிரியங்காவிடம் ராஜூ பேசும்பொழுது, “நீங்கள் சொன்னதை தானே நான் செய்தேன்?” என்று கேட்க, அப்போது பிரியங்கா, “இப்போது நீ பேசியதும் செய்ததும் தவறு இல்லை. அப்படியானால் அக்ஷரா விஷயத்தில் அப்படிச் செய்யவில்லையே?” என்று பேசுகிறார். முன்னதாக பிரியங்கா சொன்னதை ஏற்று அக்ஷராவுக்கு லைக் கொடுத்த ராஜூ, பின்பு பிரியங்கா சொன்னது நியாயமாக இருக்கிறது என்று யோசித்துக் அக்ஷராவிடம் சென்று, “உன் மனம் கஷ்டப்பட கூடாது என்பதற்காக தான் லைக் கொடுத்தேன். மற்றபடி உன் கதை பிளாட்டாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: அக்ஷராவின் கதைக்கு ஹவுஸ்மேட்ஸின் ரியாக்ஷன்! தனியே போய் சத்தமில்லாமல் அழுத அக்ஷரா!