பிக்பாஸ் வீட்டில் இந்த முறை போட்டியாளர்கள் அரசியல் கட்சிகளைத் தொடங்கி, பெயர், கட்சிக் கொடி கொள்கைகளை அறிவிக்கும் டாஸ்க் அறிவிக்கப்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே தனித்தனியே பிரிந்தும் சேர்ந்தும் நடக்கும் குழு அரசியல் பற்றி கமல்ஹாசன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது உண்மையிலே நேரடியாக அரசியல் அறிவை காட்டுவதற்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இதன் முதல் போட்டியாக கொடிநாட்டும் டாஸ்க் வைக்கப்பட, போட்டியாளர்கள் தங்கள் அணிக்காக, அதாவது தங்கள் கட்சிக்காக, கொடியை நாட்டினர். அப்போது அக்ஷரா, ராஜூ மற்றும் அபினய் மூவரும் முந்தியடித்துக்கொண்டு ஒரே நேரத்தில் 2 பைப் முனைகளில் தங்களது கொடிகளை நாட்ட முயற்சித்த சம்பவம் விநோதமாக காட்சி அளித்தது.
அதன்படி முதலில் ஒரு பைப்பை டார்கெட் செய்த அக்ஷரா, அதில் கொடியை நாட்ட முயற்சித்து, அந்தை பைப்பை பிடித்துக்கொள்ள, கொஞ்ச நேரம் அதை பிடுங்கிப் பார்த்த ராஜூ, அதை அக்ஷரா பலமாக பிடித்திருந்ததால் இன்னொரு பைப்பை டார்கெட் செய்தார்.
ஆனால் அந்த இன்னொரு பைப்பில் ஏற்கனவே அபினய் ஒரு முனையில் கொடி நாட்டிக் கொண்டிருக்க, அது தெரியாமலேயே அதன் இன்னொரு முனையில் கொடி நாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஒரே பைப்பின் இருமுனைகளிலும் இருவரும் கொடி நாட்ட முயற்சித்த சம்பவம் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும். ஏனெனில் இருவருக்குமே அதன் ஒரு முனையில் வேறு ஒருவர் டார்கெட் செய்திருப்பது தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என ரசிகர்கள் குறிப்பிட்டு இந்த சம்பவத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.