உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய படங்கள் இடம்பெறாதது குறித்து இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
72வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மாதம் ஃபிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுவதுடன், சிரந்த படங்களையும், கலைஞர்களையும் கவுரவித்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதன் முறையாக கேன்ஸ் விழாவின் ரெட் கார்பெட்டில் கலந்துக் கொண்ட இயக்குநர் ராஜீவ் மேனன் தனது கேன்ஸ் திரைப்பட விழா அனுபவம் குறித்து Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பேசுகையில், ‘உலக சினிமாவில் எனன் நடக்கிறது என்பது பற்றி தெரிந்துக் கொள்ள முடிந்தது. அங்கிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். உலகத்தில் இருக்கும் அனைத்து கலைஞர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விழா கேன்ஸ். உலகின் பல்வேறு சிரிய நாடுகளில் இருந்து திரைப்படங்கள் கேன்ஸ் விழாவில் இடம்பெற்ற நிலையில், ஒரு இந்திய படம் கூட இல்லாதது வருத்தமளித்தது.
உலகில் நிறைய கலை செய்து மக்கள் மனதில் இடம்பிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. கேன்ஸ் விழா, சினிமா மற்றும் கிளாமரை கொண்டாடும் விழா. வெளிநாட்டு சினிமா ரசிகர்களுக்கு ஒரு படத்தில் குறிப்பிட்ட சில விஷயங்கள் இருந்தால் போதும். ஆனால், நமது ரசிகர்களுக்கு த்ரில்லர், சஸ்பென்ஸ், காமெடி, காதல், ஆக்ஷன், எல்லாமே தேவைப்படுகிறது. பெரிய ஹீரோ படம் ஹிட்டாக வேண்டும் என்றால் ஃபேமிலி ஆடியன்ஸ் வர வேண்டும். கலை என்பது வேறு பொருளாதாரம் என்பது வேறு. எல்லாமும் இருந்தால் நன்றாக இருக்கும் குறிப்பிட்டவர்களுக்காக படம் பண்ண வேண்டும் என்றால் அதற்கு ஆன்லைன் பிளாட்ஃபார்மை பயன்படுத்தலாம்’ எனவும் அவர் கூறினார்.
மேலும், தற்போது ஆன்லைன் பிளாட்ஃபார்மிற்காகவும், மெயின் ஸ்ட்ரீம் படத்திற்காகவும் கதை எழுதி வருவதாக இயக்குநர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.