விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் & நடிகர் ராஜிவ் மேனன் பேட்டி அளித்துள்ளார்.
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக வெற்றிமாறன் இயக்கி உள்ளார்.
தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும், ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக் கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
இந்த படத்தினை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன், பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் தனக்கு படப்பிடிப்பு எதுவும் இல்லை. 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாட்கள் கூட அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த பட வாய்ப்புக்கு வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்." என ராஜிவ் மேனன் பேசினார்.