நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலின் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து man vs wild நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒருநாள் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார்.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் man vs wild நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு நம்மூரில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மனிதர்கள் வாழ கடினமானதாக இருக்கும் காட்டுப்பகுதியில், உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியங்களை கண்டறியும் சாகசமே இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு.
இந்த நிலையில் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து man vs wild நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் காட்டு பகுதியில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இதற்கிடையில் படப்பிடிப்பின் போது ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறுகையில், 'man vs wild நிகழ்ச்சிக்கான ஒரு எபிசோடின் படப்பிடிப்பை முடித்திருக்கிறேன். மேலும் காட்டில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. முட்களால் சிறிய கீறல்கள் மட்டுமே ஏற்பட்டது. மற்றபடி எனக்கு எதுவும் இல்லை, நன்றாகவே இருக்கிறேன்' என கூறியுள்ளார்.
Actor Rajinikanth at Chennai Airport: I have finished the shooting of an episode of 'Man vs Wild'. I have not received any wounds but just scratches due to little thorns, that's it. I am alright. #TamilNadu https://t.co/aH8JQfiV9R pic.twitter.com/mGMOTUGV8k
— ANI (@ANI) January 28, 2020