திரைத்துறையில் பல்வேறு கலைஞர்களின் அடுத்தடுத்த மரண சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
முன்னதாக பாடகர்கள் எஸ்.பி.பி, ஆட்டோகிராஃப் கோமகன், டிகேஸ் நடராஜன் உள்ளிட்டோர் மரணம் அடைந்தனர். இதேபோல் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் மரணமடைந்தனர்.
மேலும் நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா உள்ளிட்டோரின் மரண சம்பவங்கள் நெஞ்சை உலுக்கின. இவை தவிர, கஜினி, சுள்ளான் பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், தாதா87 படத்தின் இளம் தயாரிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் இயக்குநர் பொன் ராமின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி ரோலில் நடுத்தவரும், இயக்குநர் பொன் ராமின் கோ டைரக்டருமான பவுன் ராஜ் ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்துள்ளதாக இயக்குநர் பொன் ராம் தெரிவித்துள்ளார்.
#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் pic.twitter.com/uxOdKTHp2z
— ponram (@ponramVVS) May 15, 2021
இதுகுறித்து இயக்குநர் பொன் ராம், தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பொன் ராம், “வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: 'அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!'.. பிரபல தமிழ்ப்பட இளம் தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம்!.