கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க ஊரடங்கை வருகிர ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து நேற்றைய தினம் ( ஏப்ரல் 13) அறிவித்திருந்தது. இதனையடுத்து நாட்டு மக்களுடன் உரையாடிய மோடி, நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்தார்.
மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு மிகக் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் அதன் பிறகு பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு ஒரு சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பாதிப்புகள் அதிகரிப்பின் மீண்டும் பழையபடி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவரது உரையில் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், ''இந்தப் புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்'' என்று தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) April 14, 2020