'பேட்ட' நடிகரின் மனைவி அதிரடி - 'இந்த லாக்டவுன்ல என் கணவரை டைவர்ஸ்...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் தனது வித்தியாசமான வேடங்களால் ஒவ்வொரு முறையும் ரசிகர்களை அசரடித்து வருபவர் நவாஸூதின் சித்திகி. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'பேட்ட' படத்தில் சிங்காரம் என்ற வேடத்தில் வில்லத்தனத்தில் மிரட்டினார்.

Rajinikanth's Petta acor Nawazuddin Siddique's wife Aaliya Opens up about divorse issue | பேட்ட நடிகர் நவாஸூதின் மனைவி ஆலியா விவகாரத்து குறித்து கரு

நடிகர் நவாஸூதின் சித்திகி, ஆலியா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆலியா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நவாஸூதினுக்கும் தனக்கும் உள்ள திருமண உறவு குறித்து  பேசியுள்ளார்.

அதில், ''எனக்கு இப்பொழுது அந்த பிரச்சனை குறித்து பேச இயலவில்லை. ஆம் எங்கள் இருவருக்கும் கடந்த 10 வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. அவருக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன். அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது இந்த லாக்டவுனின் போது நான் இந்த திருமண உறவை முறித்துக்கொள்வது பற்றி யோசித்தேன்.

அவருக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினேன். அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. அதன் காரணமாக சட்டப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறேன்'' என்று தெரிவித்தார். மேலும் தனது குழந்தைகளை தன் பாதுகாப்பில் வளர வேண்டி நீதிமன்றத்தை அனுகவிருக்கிறாராம். இந்நிலையில் ஆலியாவின் வழக்கறிஞர் நவாஸூதினுக்கு கடந்த மே 7 ஆம் தேதி விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth's Petta acor Nawazuddin Siddique's wife Aaliya Opens up about divorse issue | பேட்ட நடிகர் நவாஸூதின் மனைவி ஆலியா விவகாரத்து குறித்து கரு

People looking for online information on Aaliya, Coronavirus lockdown, Divorce, Nawazuddin Siddiqui, Petta will find this news story useful.