இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தியேட்டர் ஒன்றில் படம் பார்த்து ரசித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவின. அதையடுத்து, ரஜினிகாந்த், தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தை பார்த்தார் என்றும், கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தை பார்த்தார் என்றும் தகல்வகள் உலாவின.
ஆனால், ‘ஷியாம ராகம்’ எனும் புதிதாக திரைக்கு வரவிருக்கும் மலையாளம் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ரஜினிகாந்த் பார்த்து ரசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பழம்பெரும் இசையமைப்பாளர் தக்ஷினாமூர்த்தி இசையில் உருவாகிய இப்படத்தை சேது இயா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சாந்தி கிருஷ்ணா, மதுவந்தி, சுதா மகேந்திரன் மற்றும் புதுமுக நடிகர்கள் ப்ரணவ் சுரேஷ், ப்ரிசிதா உதய் ஆகியோருடன் ஒந்.ஜி.மகேந்திரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் பார்த்து ரசித்த ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.