ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி துவக்கம் குறித்து அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுவது ஒருபுறம் இருக்க, அவரது அரசியல் வருகை குறித்து நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. ரஜினியும் பல சமயங்களில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இது குறித்து அலோசித்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், ரஜினி தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் தனது அரசியல் என்ட்ரி குறித்து முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது ரஜினியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறியதாவது, ''ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம். #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ''வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்.. நிகழும்'' என தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml
— Rajinikanth (@rajinikanth) December 3, 2020