Darbar USA others

சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' படத்துக்கு சென்னை பாக்ஸ் ஆபிஸில் 4 நாட்களில் இவ்வளவு வசூலா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியான 'தர்பார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Rajinikanth, Nayanthara, AR Murugadoss Darbar 4 Days Chennai Box Office Details

இந்த படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த படத்தின் சென்னை சிட்டியில் பாக்ஸ் ஆபிஸ் விவரம் தற்போது கிடைத்துள்ளது. அதன் படி சென்னையில் இந்த படம் ரூ.7.41 கோடி (தோராயமாக ரூ. 7,41,06,808) வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth, Nayanthara, AR Murugadoss Darbar 4 Days Chennai Box Office Details

People looking for online information on Anirudh Ravichander, AR Murugadoss, Darbar, Nayanthara, Rajinikanth will find this news story useful.