www.garudavega.com

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் மரணம்.. ரஜினி வெளியிட்ட உருக்கமான இரங்கல்.!.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்த ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

Rajinikanth Deep condolence on VM Sudhakar demise

Also Read | "எனக்கு இது வேணாம்".. Task-ல் ADK கொடுத்த விருது.. தூக்கி வீசிய அசிம்!!.. Bigg Boss

அத்துடன் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார் ரஜினிகாந்த். அந்த ‘ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி’யாக இருந்துவந்த வி.எம். சுதாகர் தற்போது மரணம் அடைந்துள்ளார்.  பல்வேறு சூழல்களிலும் ரஜினி மக்க மன்ற நிர்வாகியை ரசிகர்களை நெறிப்படுத்தியும் வழிநடத்தியும் வந்த சுதாகர், ரஜினியின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

Rajinikanth Deep condolence on VM Sudhakar demise

குறிப்பாக ரஜினியின் உடல்நலம் குறித்த தகவல்களுக்காக ரசிகர்களும் ஊடகங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முந்தைய சமயங்களில், வி.எம்.சுதாகரே, அந்த செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து அனைவரையும் ஆசுவாசப்படுத்துவார். ரசிகர்களின் பதட்டத்தை தணிப்பார். இந்நிலையில் அவரது மரணம் நடிகர் ரஜினிகாந்தையும், அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  வி.எம். சுதாகர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்ததாக தகவல்கள் கூறப்படுகின்றன.

Rajinikanth Deep condolence on VM Sudhakar demise

இந்நிலையில் இந்த மரணம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள ரஜினிகாந்த், “என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read | ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் மரணம்..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Deep condolence on VM Sudhakar demise

People looking for online information on Rajinikanth, VM Sudhakar will find this news story useful.