67-வது இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில், சிறந்த நடிகர் தனுஷ் (அசுரன்), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்), ஜூரி விருது பார்த்திபன் (ஒத்த செருப்பு), சிறந்த தமிழ் படம் விருது வென்ற படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் (அசுரன்), சிறந்த இசையமைப்பாளர் டி.இமான் (விஸ்வாசம்-கண்ணான கண்ணே), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் (கே.டி (எ) கருப்புதுரை) என்று திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு பேசிய ரஜினிகாந்த், இந்த விருதை தனது குருநாதர் கே.பாலசந்தர்க்கு அர்ப்பணிப்பதாக பேசினார். மேலும் தம்மை ஊக்குவித்தவரும் தன்னுடன் பேருந்து போக்குவரத்து பணியில் இருந்தவருமான லால் பகதூருக்கு நன்றி சொன்ன ரஜினி, தன்னை ஆன்மீக ஈடுபாட்டுடன் வளர்த்த தன் சகோதரர் சத்யநாராயணாவுக்கும் நன்றி தெருவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ள, கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து தமது ட்விட்டர் பதிவில், “பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம்.
பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.
கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம். pic.twitter.com/6v5uwWueAq
— வைரமுத்து (@Vairamuthu) October 27, 2021
கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.