www.garudavega.com

ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும், ஊடகவியலாளருமான ரங்கராஜ் பாண்டேயின் தந்தை நேற்றிரவு காலமானார்.

Rajinikanth attending Rangaraj Pandey Father Funeral

Also Read | அடேங்கப்பா!!! ரூ.3,000 கோடி முதலீட்டில் KGF பட தயாரிப்பு நிறுவனத்தின் மெகா ப்ளான்..

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு எதிராக நீதிமன்றத்தில் இவர் செய்யும் வாதங்கள், நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த க/பெ. ரணசிங்கம் படத்தில் தமிழ் குமரன் எனும் கலெக்டர் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்திருந்தார்.

Rajinikanth attending Rangaraj Pandey Father Funeral

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று, திங்கள் கிழமை (02.01.2023) இரவு 9:45 மணிக்கு காலமானார். இவரது இறுதிச் சடங்கு சென்னையில் உள்ள வீட்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth attending Rangaraj Pandey Father Funeral

ராம்சிங்ஹாசன் பாண்டே மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

Rajinikanth attending Rangaraj Pandey Father Funeral

மலர் மாலை அணிவித்து, பூத உடலை வணங்கி விட்டு ரங்கராஜ் பாண்டேவிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் தனது உறவினர்களை ரஜினிகாந்த்திற்கு ரங்கராஜ் பாண்டே அறிமுகமும் செய்து வைத்தார். கருப்பு நிற சட்டையும் வெண்ணிற வேட்டி அணிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Also Read | ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேயின் தந்தை மரணம்.. இரங்கல் தெரிவித்த நிதியமைச்சர்..

ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! வீடியோ வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth attending Rangaraj Pandey Father Funeral

People looking for online information on Rajinikanth, Rangaraj Pandey, Rangaraj Pandey Father, Rangaraj Pandey Father Funeral will find this news story useful.