capmaari 90 others

ரஜினியின் ’தர்பார்’ படத்தின் டிரெய்லர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த் - ஏ.ஆர். முருகதாசின் கூட்டணியில் உருவாகும் ’தர்பார்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ரஜினியின் 167வது படமான இது 2020 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

Rajinikanth AR Murugadoss's Darbar Trailer is Released now

இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துல்ளார்.

கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ’தர்பார்’ டிரெய்லர் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ் திங்கட்கிழமை (இன்று) மாலை 6.30 மணிக்கு ’தர்பார்’ டிரெய்லர் வெளியாகும் என்று அறிவித்தார்.

இப்போது வெளியாகி இருக்கும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினியின் ’தர்பார்’ படத்தின் டிரெய்லர் இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth AR Murugadoss's Darbar Trailer is Released now

People looking for online information on AR Murugadoss, Darbar, Nayanthara, Rajinikanth will find this news story useful.