வழக்கமான சிகிச்சைக்கு அமெரிக்கா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி தன் நண்பர்களுடன் உரையாடும் ஃபோட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
'சிறுத்தை', சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்புகளை முடித்த நடிகர் ரஜினிகாந்த், வழக்கமான தனது உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட நாளில் இருந்து அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தற்போது ரஜினி அமெரிக்காவில் என்ன செய்கிறார் என்பது பற்றி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
உடல் பரிசோதனைக்கு இடையே ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள தனது நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று அவர்களோடு நேரம் செலவிட்டு வருகிறார். அதே மாஸ் லுக்கோடும், அவருக்கே உரிய ஸ்டைலில் வெஸ்ட் வெர்ஜினியாவில் உள்ள நண்பர் வீட்டில் நின்றுகொண்டு, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இரண்டு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது
உடல் பரிசோதனையில் ரஜினி ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த ஆரோக்கியத்தின் வெளிபாடாக ரஜினி உற்சாகமாக இருக்கும் ஃபோட்டோவைப் பார்த்தாலே தெரியும்.
ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து, வரும் ஜூலை இரண்டாவது வாரம் சென்னை திரும்புகிறார். அமெரிக்காவில் உள்ள அவரின் இரண்டு நண்பர்கள்தான் ரஜினி தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். இந்த இரண்டு புகைப்படங்களை தற்போது அவரது ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள். 'தலைவா சீக்கிறம் வாங்க. 'அண்ணாத்த', படத்துக்கு வெயிட்டிங்' என உற்சாகத்தோடு ட்வீட் செய்து வருகிறார்கள்.
Recent pic of Superstar #RajiniKanth from USA!#Behindwoods pic.twitter.com/p9Rhnvflv7
— Behindwoods (@behindwoods) June 30, 2021