மாரடைப்பால் சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் இந்தியாவையும் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமது ட்விட்டர் பக்கத்தில், 'சிவாஜி' படத்தில் விவேக்குடன் நடித்தது தம் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என தெரிவித்துள்ளார்.
#RipVivek pic.twitter.com/MSYVv9smsY
— Rajinikanth (@rajinikanth) April 17, 2021
“நகைச்சுவையில் தனித்தடம் பதித்தவர் விவேக். நகைச்சுவையை பகுத்தறிவு வழியே பரப்பிய கலைஞன். கலைக்கு வெளியிலும் சமூக வெளியிலும் பங்காற்றியுள்ளார். மரணமே உனக்கு சிரிக்கத் தெரியாது. அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய்” என கவிப்பேரரசு வைரமுத்து பேசியுள்ளார்.
அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!
திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!
மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.
கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்.
— வைரமுத்து (@Vairamuthu) April 17, 2021
அத்துடன் தமது ட்வீட்டில் வைரமுத்து “அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! திரையில் இனி பகுத்தறிவுக்குப்பஞ்சம் வந்துவிடுமே!” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: காலமானார் விவேக்!.. சோகத்தில் ஆழ்த்திய மரணம்.. பேரதிர்ச்சியில் திரையுலகம்!