ஆல்யா மானசா, சித்து நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2-ஆம் பாகம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
சரவணன் - சந்தியா தம்பதியர் நல்ல புரிதலில் இருந்து வரும் அதே நேரம், சரவணனின் அம்மாவின் மனதில் சந்தியா இடம் பிடிக்க முடியாத நிலை உள்ளது. இதனிடையே சரவணனின் சகோதரர்கள், சகோதரி, சகோதரன் செந்திலின் மனைவி என அனைவரும் சந்தியாவுக்கு எதிரான காரியங்களை அவ்வப்போது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், வீட்டில் நகை காணாமல் போனதாக சந்தியா மீது பழி வந்துள்ளது. இதற்கென தமது தரப்பு ஆதாரமாக, தமது அண்ணன், வங்கியில் அடகு வைத்த நகை, ‘காணாமல் போன அந்த நகை அல்ல!’ என்பதற்கான ரசீதை சந்தியா சமர்ப்பிக்கிறார்.
ஆனால் அந்த நகை வேறு வங்கியில் அடகு வைக்கப்பட்டிருக்கலாம் என செந்தில், அர்ச்சனா, பார்வதி மூவரும் திசை திருப்பிவிடுகின்றனர்.
இதை பார்த்து கடுப்பாகும் சரவணன், நகையை செந்திலும், அர்ச்சனாவும் தான் எடுத்தார்கள் என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், உண்மையை போட்டு உடைக்க, செந்திலும் அர்ச்சனாவும் ஒத்துக்கொள்ள மறுத்து, கோபமாக பேசுகின்றனர்.
சரவணனின் தாயாரும் சரவணனை நம்ப மறுக்கிறார். இதனால் சரவணனின் சகோதரன் செந்திலிடம் இருக்கும் கேமராவை எடுத்துவரச் சொல்லி சரவணன் கூற, செந்திலும் கேமராவை எடுத்து வர, சரவணன் அதை வாங்கிப் பார்க்கிறான்.
அதற்குள் அர்ச்சனாவோ, “எங்க? ஆதாரத்தை காட்டுங்க பார்ப்போம்.. இந்த வீட்டில் எது நடந்தாலும் எங்க மேலயே பழி சொல்லுவீங்களா?” என கிடைத்த கேப்பில் ஒரு குட்டி பெர்ஃபார்மென்ஸ் பண்ணுகிறார். அர்ச்சனாவும் செந்திலும் அந்த கேமராவில் இருந்த ஆதாரத்தை அழித்துவிட்ட நம்பிக்கையில் தான் இப்படி உறுதியாக நிற்கிறார்கள்.
இந்த பக்கம், அந்த ஆதாரத்தை பார்க்கும் சரவணனுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் கேமராவில் அந்த ஆதாரம் காணவில்லை. அழிக்கப்பட்டுவிட்டது. இந்த விறுவிறு எபிசோடுதான் தற்போது வரை நடந்துள்ளது.
ஆனால் இன்னொரு ப்ரோமோவில், கேமராவில் இருக்கும் ஆதாரம் அழிக்கப்பட்டதை அடுத்து முதலில் சரவணன் அதிர்ச்சி ஆக, இதுதான் சாக்கு என்று அர்ச்சனாவும் செந்திலும் எகிறுகிறார்கள்.
கடைசியில் செம்ம ட்விஸ்ட் கொடுக்கும் சரவணன் தமது செல்போனில் இருக்கும் ஆதாரத்தை எடுத்து வந்து செந்தில் மற்றும் அர்ச்சனாவை அம்பலப்படுத்துவதாக காண்பிக்கப்படுகிறது. இதன் காட்சிகளை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.