பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் படம் "RRR".
இந்த படத்தில் காலனிய இந்தியாவை நினைவுபடுத்தும் வகையில் தயாரிப்பு வடிவமைப்பு சாபுசிரில் தலைமையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.
சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. எஞ்சிய இரண்டு ஷாட்கள் மட்டும் மீதமுள்ளதாகவும், படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சீல் ஆரம்பிக்கப்பட உள்ளன.
And thats a wrap! 🤟🏻
Except a couple of pickup shots, we are officially done with the entire shoot of #RRRMovie. Incidentally finished with the same bike shot that we started with on November 19th 2018. pic.twitter.com/lfXErpTbSS
— RRR Movie (@RRRMovie) August 26, 2021
மேலும் வரும் நாட்களில் அக்டோபர் மாத வெளியீடும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதால் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர போராட்டம் பற்றிய கதை என்பதால், 2022 குடியரசு தினவிழாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.