விஜய் டிவி என்றாலே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தான் பிரசித்தம். பல நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. அப்படி நடிகை ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் இணைந்து நடித்த நாடகம் ராஜா ராணி. அந்த சீரியல் வெற்றி பெற்றதையடுத்து அதே பெயரில் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஆல்யா மானசா உடன் கலர்ஸ் சேனலில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ராஜா ராணி 2. அதே போல் இதன் ஒளிபரப்பு நேரமும் ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது.
இந்த சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற "என் கணவன் என் தோழன்" என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். ஆல்யா சித்து தவிர ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் முக்கியமாக மாமியார் வேடத்தில் நடிக்கும் நடிகை பிரவீனா பலரையும் கவர்ந்து உள்ளார். மலையாளம், தமிழ் மொழிகளில் பல்வேறு விருதுகளை பெற்ற இவர் யார் என்று தெரியுமா? பிரபல 80ஸ் நாயகியான நடிகை ஸ்ரீவித்யாவின் நெருங்கிய உறவினர் தான் இவர். ஸ்ரீவித்யா இவருக்கு அத்தை முறை வேண்டும் என்று தெரிகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..!