பிரபல தமிழ் டிவி சேனல் ஓடிடி தளத்திலும் கால் பதிக்க உள்ளது.
Also Read | ரிலீசான PRINCE படத்தின் 2வது சிங்கிள்.. சிவகார்த்திகேயனின் ஜாலியான கலர்ஃபுல் டான்ஸ்!
கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகின்றன.
ஏற்கனவே இந்தியாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜி5, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், சோனி லிவ், வூட், ஆஹா, சன் நெக்ஸ்ட் ஆகிய முன்னணி நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு வகையான பார்வையாளர்கள் & கட்டணங்களை கொண்டுள்ளன.
இந்நிலையில் தமிழ் நாட்டின் முன்னணி தொலைக்காட்சி சேனலான ராஜ் டிவி ஆரம்பித்து 28 வருடங்கள் ஆவதையொட்டி தற்போது ஓடிடி தளத்திலும் கால் பதிந்துள்ளது. ராஜ் டிஜிட்டல் எனும் பெயரில் ஓடிடி தளத்தை இன்று முதல் துவங்கி உள்ளது. ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் எனும் கட்டணத்தில் இந்த சேவையை வழங்க உள்ளது. ஆயிரக்கணக்கான படங்கள், வெப் சீரிஸ், நிகழ்ச்சிகள், லைவ் சேனல்கள் இந்த தளத்தில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | TRENDING: மாலத்தீவு கடற்கரையில் இன்பச்சுற்றுலா.. வைரல் ஆகும் நடிகை அமலாபால் போட்டோஸ்