www.garudavega.com

'தனிமையே பிடிக்கலபா' ரைசாவின் வைரல் ட்வீட்! ‘நாங்க இருக்கோம்’ தெறிக்கும் கமென்ட்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி 2', திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் ரைசா வில்சன். பிறகு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 -ல் பங்கேற்று ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.

Raiza wilson viral tweet Splashing fans Comments

அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல்’, படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வரவேற்பை பெற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது ட்விட்டரில் இடும் பதிவுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது அவர் ட்விட்டரில் எழுதியுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது, "தனிமை எனக்கு வெறுப்பாக இருக்கிறது" என்று அவர் எழுதியுள்ள பதிவுக்கு அவரது ரசிகர்கள், "நீங்கள் தனிமையில் இருப்பதாக உணரவேண்டாம் ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களோடு பேசலாம்" என்று பதில் அளித்து வருகிறார்கள்.

Raiza wilson viral tweet Splashing fans Comments

சமீபத்தில் லைவ் வீடியோவில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் அதிகம் பேர் 'எப்போது திருமணம் செய்வீர்கள்?' என்று தான் கேள்வி கேட்டிருந்தனர், அதனால் கடுப்பான ரைசா "What is this. எல்லோரும் இதே கேள்வியை கேட்கிறீர்கள். இந்த லாக்டவுனில் நான் எங்கே சென்று திருமணம் செய்ய ஒருவரை தேடுவேன். இந்த நேரத்தில் திருமணம் செய்ய அனுமதி இல்லை” என கூறியதோடு தன்னுடைய காதல் தோல்வி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

Raiza wilson viral tweet Splashing fans Comments

இப்படியாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வரும் ரைசா, 'எஃப்.ஐ.ஆர்', 'தி சேஸ்', 'காதலிக்க யாரும் இல்லை', 'ஆலிஸ்', உள்ளிட்ட  திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raiza wilson viral tweet Splashing fans Comments

People looking for online information on Raiza Wilson, Tweet will find this news story useful.