மாஸ்டர் பாட்டு வாசித்த மாற்றுத்திறனாளி.. தளபதி விஜய் ஃபோன்ல என்ன சொன்னார் தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அனிருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

விஜய்க்கு நன்றி சொல்லிய லாரன்ஸ் | raghava lawrence thanks vijay and anirudh for making a youth's dream come true

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய முனி, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இவர் தற்போது சந்திரமுகி-2 வில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சமுக நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் லாரன்ஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவரது மாற்றுத்திறனாளிகள் க்ரூப்பில் இருக்கும் டான்சன் என்பவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை வாசித்தார். மேலும் விஜய்க்கு முன் வாசிக்கவும், அனிருத்தின் இசையில் வாசிக்கவும் அவர் விரும்பியுள்ளார். இதையடுத்து லாரன்ஸ் அவரின் வீடியோ பதிவை விஜய் மற்றும் அனிருத்துக்கு அனுப்பியுள்ளார். 

அந்த வீடியோவை பார்த்த விஜய், லாரன்ஸிடம், லாக்டவுன் முடிந்த பிறகு அவரை என் முன் வாசிக்க நேரில் அழைத்து வாருங்கள் கூறியுள்ளார். மேலும் அனிருத் தனது இசையில் அவரை வாசிக்க வைக்கவுள்ளதாக கூறியுள்ளார். விஜய் மற்றும் அனிருத்தின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்க்கு நன்றி சொல்லிய லாரன்ஸ் | raghava lawrence thanks vijay and anirudh for making a youth's dream come true

People looking for online information on Anirudh Ravichander, Master, Raghava Lawrence, Vaathi Comig, Vijay will find this news story useful.