பி. வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 திரைப்படம் குறித்து அசத்தலான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு, ஒரு சில மாதத்திற்கு முன் மைசூரில் வைத்து பூஜையுடன் தொடங்கி இருந்தது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் 'சந்திரமுகி 2' திரைப்படத்தை தயாரிக்கிறார். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி. வாசு இயக்குகிறார்.
இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதே போல, சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் காமெடி காட்சிகள் மூலம் அதகளம் பண்ணிய வடிவேலு, இரண்டாவது பாகத்திலும் இணைந்துள்ளார்.
கலை இயக்குநர் பணிகளை தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஆர். டி. ராஜசேகர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் வைத்து நிறைவு பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தின் BTS புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியும் வந்தது.
இந்த நிலையில், தற்போது சந்திரமுகி 2 படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. அதன்படி, சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத் பகுதியில் வைத்து இன்று (11.10.2022) ஆரம்பமாகி உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இனிவரும் நாட்களில் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் இருக்கும் BTS புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.