தன் பெயரைப் போலவே பேத்திக்கு பெயர் வைத்த மகள் - மகிழ்ச்சியில் பாட்டி ராதிகா கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னம் கதை எழுதி தயாரித்த 'வானம் கொட்டட்டும்' படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரத்குமாருடன் இணைந்து ராதிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து ராதிகா கோடீஸ்வரி என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை தனக்கெ உரிய ஸ்டைலில் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி பார்ட் 2 மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயானிற்கு ஏற்கனவே ஆண் குழந்தையுள்ள நிலையில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். தற்போது ரேயான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகளுக்கு வைத்துள்ள பெயரை அறிவித்தார். அதன் படி தனது மகளுக்கு ராத்யா மிதுன் ( Radhya Mithun) என்று பெயர் வைத்துள்ளார்.

இந்த பதிவில், ''என் மகள் ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீ தைரியமானவளாக அசாதாரணமானவளாக வளர வேண்டும் என விரும்புகிறேன். இவளது பெயர் எனக்கு உயிர் கொடுத்தவரிடம் இருந்து வந்தது. அவரைப் போல இவளும் சாதனைகள் பல புரிவாள்'' என்று தெரிவித்தார். இதற்கு ராதிகா சரத்குமார் பேபி டால் என்று கமெண்ட் செய்திருந்தார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Radhika Sarathkumar reacts to her granddaughter’s name | Rayane Mithun, Radhya Mithun | ராதிகா சரத்குமார் தனது பேத்தியின் பெயருக்கு கொடுத்த ரியாக

People looking for online information on Grand daughter, Radhika Sarathkumar, Rayane Midhun will find this news story useful.