Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR, ராதிகா, சித்தி இத்னானி மற்றும் பலர் நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
Also Read | Lohithaswa prasad : அதிர்ச்சி…! அகாண்டா, சாஹோ படங்களில் நடித்த பிரபல மூத்த நடிகர் மரணம்!
50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இவ்விழாவில் பேசும்போது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி.” என பேசினார்.
இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்த படத்தை பல சிக்கலைதாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ ஆர் ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ” என குறிப்பிட்டார்.
இவ்விழாவில் பேசிய நடிகை ராதிகா, “இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ஒரு நேரத்தில் எல்லாம் இப்படி 100வது நாள் கொண்ட்டாட்டங்கள் நடக்கும். ஆனால் திரைத்துறையில் பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. ஒரு வாரத்தை கடந்தால் செம கலெக்ஷன் என்கிற ரேஞ்சுக்கு வந்துட்டோம். இப்படி 50வது நாள் ஷீல்டு வாங்குவதெல்லாம் மறைந்து போனது. இந்த படத்திற்கு அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது. அவர் படம் நமக்கு தெரியும். அழகான ஒரு பொண்ணு.. சுவர் ஏறி குதித்து ஒரு பெண்ணை சைட் அடிப்பது, கிசுகிசுவென அவர்கள் பேசிக்கொள்வது, காலை பிடித்து விரலை தொட்டு என இப்படியெல்லாம் காதலாக படம் எடுப்பார். ஆனால் முதல் நாள் திருச்செந்தூர் அழைத்து சென்று செக்கச்சிவந்த மண்ணுல செருப்பு இல்லாமல் நடந்துவரச்சொன்னாரு.., அப்போது நான் சிம்புவிடம் ‘இந்த கௌதம் நம்மை வெச்சு செய்றான்.. நம்மை காய விட்டானே’ என்றேன். அப்போது டெண்ட்டில் இருந்து கௌதம், ‘நான் கேட்டுட்டேன் ராதிகா’ என்றார். ஏனென்றால் என் மைக் ஆன் ஆகி இருந்தது. (சிரிக்கிறார்)
பின்னர் இதிலும் காதல் இருக்கா? என கேட்டேன். படம் பார்க்கும்போதுதான் ஆச்சரியப்பட்டேன். உண்மையில் தன்னை மீறி வித்தியாசமாக ஒன்றை செய்ய முடியும் என்பதுதான் ஒரு இயக்குநரி வெற்றி. ஆழமாக படமாக, முத்து எனும் கேரக்டரின் சிறப்பான பயணமாக இதை கொண்டு வந்துள்ளார்.” என நடிகை ராதிகா பேசியுள்ளார்.
Also Read | இந்த ஜனனி மேல அம்புட்டு பாசம் வெச்சேன்.. கொச்சப்படுத்திட்டா.. .. குமுறிய ஏடிகே.! bigg boss