www.garudavega.com

பொங்கலுக்கு வெளியாகும் PAN INDIA படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செனை: பொங்கலுக்கு வெளியாகும் PAN INDIA படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை கைப்பற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்!

Radhe Shyam Tamilnadu Theaterical Rights acquired by Red Giant

ராதே ஷியாம்

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது. அதனைத்தொடர்ந்து காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Radhe Shyam Tamilnadu Theaterical Rights acquired by Red Giant

பொங்கல் ரிலீஸ்

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேயின் 'ராதே ஷ்யாம்' உலகம் முழுவதும் ஜீலை 30, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை காரணமாக, படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 14, 2021 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம் வெளியாகிறது.

Radhe Shyam Tamilnadu Theaterical Rights acquired by Red Giant

உதயநிதி ஸ்டாலின்

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை (Theatrical Rights) உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாடலின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம், சிங்கிள் பாடல்கள் வெளியான போதே ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் உலக புகழ்பெற்ற கைரேகை நிபுணர் விக்ரமாதித்யாவாக  பிரபாஸ் மனங்களை கொள்ளை கொள்கிறார். பூஜா ஹெக்டே பிரபாஸின் காதலியாக வலம் வருகிறார்.

Radhe Shyam Tamilnadu Theaterical Rights acquired by Red Giant

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Radhe Shyam Tamilnadu Theaterical Rights acquired by Red Giant

People looking for online information on பிரபாஸ், Pooja Hegde, Prabhas, Radhe Shyam, Udhayanidhi Stalin will find this news story useful.