பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ராதே ஷ்யாம்' திரைப்படத்தின் ரிலீஸ், தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல், வேகம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள், இதன் மூலம் பதிக்கப்பட்டது வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல விதமான கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொது இடங்களான வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாநிலங்கள், திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதித்துள்ளது. அது போக, திரையரங்குகளை முழுமையாக மூடவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இது மாஸான காம்போ ஆச்சே.. 'துர்கா' படம் குறித்து ராகவா லாரன்ஸ் போட்ட ட்வீட்.. இனிமே சரவெடி தான்
கடும் கட்டுப்பாடுகள்
இனிவரும் நாட்களில், பல மாநிலங்கள் திரையரங்குகளில் அதிக கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் என்பதால், திட்டமிட்ட படி, சில படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என். டி. ஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த 'RRR' திரைப்படம், ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தள்ளிப் போன ரிலீஸ்
இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக, புதிய தேதியை அறிவிக்காமல், படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மற்றொரு தெலுங்கு படமான 'ராதே ஷ்யாம்' திரைப்படமும் தள்ளிப் போவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பேன் இந்தியா திரைப்படமாக உருவான 'ராதே ஷ்யாம்' திரைப்படம், ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விரைவில் சந்திப்போம்
இதுகுறித்த ட்விட்டர் பதிவில், 'தற்போதுள்ள கோவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எங்களின் ராதே ஷ்யாம் ரீல்ஸை ஒத்தி வைக்கிறோம். ரசிகர்களின் அளவு கடந்த அன்பிற்கும், ஆதரவிற்கும், எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்' என தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
திமுக அமைச்சர் குடும்பத்திற்கு சம்பந்தியாகும் வலிமை பட தமிழக வினியோகஸ்தர்! செம தகவல்...
இயக்குனரின் ட்வீட்
முன்னதாக, நேற்று இந்த படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'காலங்கள் கடினமானவை, இதயங்கள் பலவீனமானவை, மனங்கள் குழப்பத்தில் உள்ளன. வாழ்க்கை நம் மீது எதைக் கொண்டு எறிந்தாலும், நமது நம்பிக்கைகளை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருங்கள், உயர்வாக இருங்கள்' என குறிப்பிட்டிருந்தார்.
இதனால், ராதே ஷியாம் திரைப்படம் தள்ளிப் போகும் நிலையில் உள்ளது என்பதை நேற்றே ரசிகர்கள் ஊகிக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
We have to postpone the release of our film #RadheShyam due to the ongoing covid situation. Our sincere thanks to all the fans for your unconditional love and support.
We will see you in cinemas soon..!#RadheShyamPostponed pic.twitter.com/aczr0NuY9r
— UV Creations (@UV_Creations) January 5, 2022
Times are tough, hearts are weak, minds in mayhem. Whatever life may throw at us - Our hopes are always High. Stay safe, stay high - Team #radheshyam
— Radha Krishna Kumar (@director_radhaa) January 4, 2022