டப்பிங் யூனியன் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
டப்பிங் யூனியன் தலைவர் தேர்தல் வரும் 15-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைவர் பதவிக்காக ராதாரவி மனு தாக்கல் செய்தார். மேலும் பாடகி சின்மயியும் அவரது தரப்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து வடபழனியில் உள்ள டப்பிங் யூனியனுக்கு சின்மயி மனுதாக்கல் செய்ய வந்த போது, யூனியனில் இருந்து அவர் நீக்கப்பட்டதால், மனு தாக்கல் செய்ய கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட, காவல்துறையில் தலையிட்டு சின்மயியையும் உள்ளே அனுப்பி வைத்தனர். இதையடுத்து சின்மயி தனது மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் டப்பிங் யூனியன் சங்க தேர்தலில் ராதாரவி போட்டியின்றி வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சின்மயியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நான் லீகலாக அனுகுவேன். ராதாரவியை எதிர்த்து நிச்சயம் போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.
Mr Radha Ravi has won ‘Unopposed’ and they rejected my nomination it seems.
despite the fact that my interim order says I have all the rights to be a member.
I dont understand how the Honble Retired Justice Sri Ravi decided I am not a member when the Court says so. pic.twitter.com/QPu1nfHz1H
— Chinmayi Sripaada (@Chinmayi) February 5, 2020