தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. சுமார் 70 நாட்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.
Also Read | "என்னது? Bigg Boss அசிம், ரச்சிதா சேர்ந்து சீரியல்ல நடிச்சுருக்காங்களா?".. இது எப்ப?
இனி வரும் நாட்கள் அனைத்து போட்டியாளர்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அனைவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதில், பிரபல சீரியல் நடிகையான ரச்சிதாவும் கலந்து கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ஸ்டைலில் ஆடி வரும் ரச்சிதாவுக்கு நிறைய ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் தனது குடும்பம் குறித்து ரச்சிதா பேசியுள்ள விஷயம், பலரையும் உருக வைத்துள்ளது.
"நான் பெங்களூர்ல இருந்து வந்ததுனால ரொம்ப வசதியா வாழ்ந்து இருப்பேன், அப்படின்னு எல்லாரும் நினைச்சுட்டு இருப்பாங்க. நான் எங்க வீட்டுல ஒரே பொண்ணு. நான் பொறக்கும் போது எங்க அப்பாவுக்கு 300 ரூபாய் சம்பளம். அவர் டிரைவரா இருந்தாரு. ஜாயிண்ட் ஃபேமிலினால 300 ரூபாய்ல ₹200 ஃபேமிலிக்கு கொடுத்துட்டு 100 ரூபாவ அம்மா கைல கொடுப்பாரு. எங்க அம்மா படிச்சதே கிடையாது. அதுனால அவங்க பொண்ணு நல்லா படிக்கணும்ன்னு நெனச்சாங்க. டெய்லரிங் வேலை பார்த்து அதுல வர்ற சம்பளம், என் அப்பா சம்பளமும் சேர்த்து என்ன படிக்க வெச்சாங்க.
என் அக்கா நல்லா படிப்பா, நான் படிப்புல கொஞ்சம் கம்மிதான். ஜாயிண்ட் ஃபேமிலினால எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இதுனால நிறைய நெருக்கடி வந்துச்சு. அதெல்லாம் நான் நல்லா படிக்கணும்னு என் மேல போட்டாங்க. என்னை அடிக்கிறது ஆகட்டும். கழுத்தை நெரித்து நீ செத்துரு செத்துருன்னு என்னை சொல்லி இருக்காங்க. என் அப்பாவும் சரி அம்மாவும் சரி அப்படித்தான் பண்ணாங்க. ஆனா இன்னைக்கு அவங்க ரொம்ப பெருமைப்படுறாங்க அது வேற விஷயம்.
ஆனா முன்னாடி இருந்த சூழ்நிலையில நான் வாழ்க்கை வேணாம்னு முடிவு பண்ணி அதுல இருந்து நிறைய எண்ணங்களை மாற்றி என்னை வெளியே கொண்டு வந்து இருக்காங்க. இப்படி போயிட்டு இருக்குற நேரத்ததுல என்னை காப்பாத்துனது என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் தான்.
இதுக்கு நடுவுல, காலேஜ்ல எங்க அப்பா கட்டு கட்டா பணம் கொண்டு போய் பீஸ் கட்டுனத பாத்தப்போ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணிச்சு. இவ்ளோ பணம் சேர்த்து என்ன படிக்க வைக்குறாங்கன்னு ஏதாவது ஒரு வேலைக்கு சேரணும்ன்னு நெனச்சேன். ஆனா, பிளஸ் டூ படிக்கும் போது நானும் முயற்சி பண்ணேன் என்னால முடியல நான் பெயில் ஆயிட்டேன். எங்க அம்மாவும் இதுனால Attempt எல்லாம் பண்ணாங்க. நான் அவ்ளோ தான்னு நெனச்சாங்க. அதுக்கு அப்புறம், திரும்ப எக்ஸாம் எழுதி, பாஸ் ஆகி Law படிக்க சேர்ந்தேன். அப்பவும் எவ்ளோ பண்ணியும் என்னால படிக்க முடியல" என ரச்சிதா தெரிவித்தார்.
இதன் பின்னர், நிகழ்ச்சி ஒன்றில் ஆடிஷன் செய்து வாய்ப்பு கிடைக்க அதில் ஒன்றிரண்டு ஷோக்களிலும் ரச்சிதா கலந்து கொண்டதாக தெரிவித்தார். இதன் பின்னர் கேபிள் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது பற்றி பேசிய ரச்சிதா, தினமும் 3 கிலோ மீட்டர் நடந்து சென்றதை பற்றியும், இதனை கண்டு அவரது பெரியப்பா சேர்த்து வைத்த பணத்தில் ஸ்கூட்டி ஒன்று வாங்கி கொடுத்ததை பற்றியும் மனம் உருகி கருத்து தெரிவித்திருந்தார்.
அதே போல, தனக்கு அடுத்தடுத்து கிடைத்த சீரியல் வாய்ப்பு குறித்தும், அம்மா இப்போது வரை தன் மீது வைத்த நம்பிக்கை குறித்தும் பல்வேறு உருக்கமான கருத்துக்களை பேசிய ரச்சிதா, தான் உயிர் இருக்கும் வரை அம்மாவை சிறந்த முறையில் பார்த்துக் கொள்வேன் என தெரிவித்தார். நடிகை ரச்சிதாவின் மனம் உடைய வைக்கும் பின்னணி தற்போது பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
Also Read | "பாசம் வைக்க, நேசம் வைக்க".. அசிம், கதிர் Friendship.. லைவ் ஷோவால் மாறிய வாழ்க்கை.. "சூப்பர்ல"