தன் அம்மாவுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துளார் நடிகை ராய் லக்ஷ்மி.
தமிழ் திரை உலகில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமான ராய் லட்சுமி. இவர் தனது நடிப்பு மற்றும் அழகின் மூலம் பல்வேறு ரசிகர்களை கவர்ந்தார். தாம் தூம், வாமனன், காஞ்சனா போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானார். மேலும் 2011ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் வில்லியாகவும் நடித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடலாக இருந்த இவர் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது Cinderella என்ற படத்தில் நடித்து வருகிறார்.
எப்பொழுதும் சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ராய்லட்சுமி, அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவார். மேலும் ரசிகர்களுக்கு உடற்பயிற்சி பற்றிய அறிவுரைகளும் வழங்கி வருவார்.
ஆரம்பத்தில் சாதாரண கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான இவர் அதன்பின் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் மிக நேர்த்தியான கதாப்பாத்திரங்களில் ஏற்று நடித்தார்.
மேலும் மலையாளத்திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி உடனும் நடித்து பிரபலம் ஆகியுள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தியிலும் இவருக்கு படவாய்ப்புகளும் அமைந்தன. தமிழில் இரும்புத்திரை, அரண்மனை, அதன்பின் 2016ஆம் ஆண்டு வெளியான பெங்களூர் நாட்கள் மற்றும் சௌகார்பேட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் ஜூலி 2 என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
இவர் சமீபத்தில் வலிமை திரைப்படத்திலிருந்து வெளியான நான் பார்த்த முதல் முகம் என்ற அம்மா பாடலுடன் தனது அம்மாவிற்கு முத்தமிட்டபடி வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. இவரது நடிப்பில் பல படங்கள் வெளிவர தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.