விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் ராகவ் மற்றும் ப்ரீத்தா. இருவருமே பன்முக தன்மை கொண்டவர்கள். ராகவ் நடிகர், இயக்குனர், தொகுப்பாளர் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் சேர்ந்து ஜோடி நம்பர்-1, டான்ஸ் ஜோடி டான்ஸ், மானாட மயிலாட போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். 2011-ஆம் ஆண்டு வெளிவந்த 'நஞ்சுபுரம்' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், அதற்கு முன்னதாகவே நீ ரொம்ப அழகா இருக்க, சத்தம் போடாதே, சிலம்பாட்டம், எந்திரன், வேலாயுதம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராகவ் நடிகை ப்ரீத்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை ப்ரீத்தாவும் பரதநாட்டியம் மோகினி ஆட்டம் போன்ற பல நடனங்களை கற்று தேர்ந்தவர் தான் கர்ப்பமாக இருக்கும் பொழுது கூட நாடன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆச்சரியப்படுத்தினார். இவர்கள் இருவரும் இன்னும் பார்ப்பதற்கு இளம் ஜோடிகளை போலவே இருப்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இந்நிலையில் அவர்களுடைய மகளை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ராகவ் ப்ரீத்தா தம்பதியினருக்கு வளர்ந்த மகள் ஒருவர் உள்ளார். அவரது பெயர் தனிஷா. இந்நிலையில் குடும்பமாக அவர்கள் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.