சென்னை: இயக்குனர் நடிகர் பார்த்திபனுக்காக இயக்குனர் மணிரத்னம் களமிறங்கியுள்ளார்.
ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'.ஒரே ஷாட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பார்த்திபன் நடித்தும் வருகிறார். 2015ம் ஆண்டு வெளியான ’விக்டோரியா’ எனும் ஜெர்மானிய திரைப்படம் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானும், பார்த்திபனும் கடந்த 2001 ஆம் ஆண்டு யெலோலோ என்ற படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் அந்தப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
பின் மீண்டும் ‘இரவின் நிழல்’ படம் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானும், பார்த்திபனும் இணைந்தனர். இரவின் நிழல் படத்திற்காக 3 பாடல்களை பெற்றுவிட்டதாக ஏற்கனவே அப்டேட் வெளியானது.
இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் 19.03.2022 அன்று வெளியாகும் என பார்த்திபன் அறிவித்துள்ளார். மேலும் இந்த முதல் லுக் போஸ்டரை மணிரத்னம் வெளியிடுவார் என்றும் ஏற்கனவே பார்த்திபன் அறிவித்தார். இதை டிவிட்டரில் டிவீட் செய்து, "வார்த்தைகள் மிக குறைவாக ஆனால் வீரியமாக பயன்படுத்தும் இயக்குனர் வெளியிடுவதால்….கொஞ்சமே silent -ஆக போட நினைத்து…. அதுவும் இப்படி நீண்டு விட்டதே!!! " என கூறியுள்ளார்.
இதற்கு முன் டிசைனர் கண்ணதாசன், போஸ்டரில் முதல் லுக் போஸ்டர் வெளியிடும் தேதியை போடாமல் விட்டு விட்டதாக ஆடியோ வெளியிட்டு ஜாலியாக பேசியிருந்தார்.
Good evening friendz@arrahman @MadrasTalkies_ @onlynikil @GappiGopi #IravinNizhal#Shadowofthenight #Parthiban #RadhakrishnanParthiban #Arr #ARRahman#anyguess #kollywood#Tamilcinema #staytuned#guesswho#keepguessing#tomorrow#nikil pic.twitter.com/LA4KeaLUmp
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 13, 2022
இரவின் நிழல்' படத்துக்கு இடையே, அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'ஒத்த செருப்பு' படத்தின் இந்தி ரீமேக்கையும் பார்த்திபன் இயக்கி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது