www.garudavega.com
RRR Others USA

துபாய் எக்ஸ்போவில் மாஸ் காட்டிய நடிகர் R.மாதவன் இயக்கி நடித்த புதிய படம்.. சுவாரஸ்ய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் R.மாதவன், இயக்கத்தில்  “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தின் டிரெய்லர்  துபாய் எக்ஸ்போ 2022 நிகழ்வில் மிக உயரிய வரவேற்பை பெற்றது

R Madhavan’s “Rocketry: The Nambi Effect” trailer at Dubai Expo

துபாய் எக்ஸ்போ 2022 வில் திரையிடப்பட்ட   நடிகர் R. மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்வின் சுவாரசியமான பகுதி என்னவென்றால், பிரமாண்டமான டிரெய்லரைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். சிறப்பு அழைப்பாளர்களுடன் உரையாடுவதற்காக மாண்புமிகு - ராக்கெட் விஞ்ஞானி திரு நம்பி நாராயணன் அவர்கள் மேடை ஏறியதும் அவர்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.

R Madhavan’s “Rocketry: The Nambi Effect” trailer at Dubai Expo

இந்த உரையாடல் நிகழ்வின் போது, ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், நடிகர் R.மாதவனிடம் இப்படத்தின் கதையைச் சொல்ல வேண்டும் என்றபோது உங்கள் கருத்து எவ்வாறு இருந்தது என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, அவர் கூறியதாவது.., “பொறியியல் துறைசார் அறிவின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரால் என் கதை சொல்லப்பட வேண்டும் என நான் விரும்பினேன். அந்தவகையில், மாதவன் ஒரு பொறியாளர் என்பதால், என் கதையை அவரிடம் சொல்வது எனக்கு மிக எளிதாக இருந்தது. என் வாழ்வின் ஒரு  குறிப்பிட்ட சூழ்நிலையில் APJ அப்துல் கலாமின் உயிரைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சிகளை அந்த சம்பவத்தை நான் விளக்கத் தொடங்கிய நேரத்தில், மாதவன் நான் உச்சரித்த வார்த்தையில்  ‘வளிமண்டல அழுத்தத்தில் சமநிலையின்மை’ என்ற பதத்தை உடனடியாக  புரிந்துகொண்டார். அவரது இயல்பிலேயே உள்ளார்ந்த பகுதியாக பொறியியல் பற்றி நிறைய அறிந்திருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

மேலும் ராக்கெட் விஞ்ஞானி, உண்மையின் பாதையில் செல்ல வேண்டும் ஒருவரால் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், நீங்கள் சோர்ந்து போய் விடக்கூடாது, நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும். என்ற செய்தியை இளைஞர்களுக்குத் தெரிவித்ததைக் கேட்டு, அங்கு குழுமியிருந்த மொத்த கூட்டமும் உற்சாகமடைந்தனர். 

ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் திரைப்படம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அவர் உளவு ஊழலில் தவறாக குற்றம் சாட்டப்பட்டு அதில் சிக்கி, பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணன் பாத்திரத்தில் கதாநாயகனாக மாதவன் நடித்துள்ளார், சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், கார்த்திக் குமார் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர், இப்படத்தில் இந்திய திரைத்துறை பிரபலங்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

R Madhavan’s “Rocketry: The Nambi Effect” trailer at Dubai Expo

“ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்”  திரைப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. R.மாதவன் இப்படத்தை எழுதி இயக்குவதுடன்,  சரிதா மாதவன், TriColour films மற்றும் Varghese Moolan Pictures க்காக வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். 

இப்படம் உலகமெங்கும் 2022 ஜூலை 1 திரையரங்குகளில் வெளியாகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

R Madhavan’s “Rocketry: The Nambi Effect” trailer at Dubai Expo

People looking for online information on “Rocketry The Nambi Effect”, R Madhavan will find this news story useful.