புதிய கலர் ஃபுல் போஸ்டருடன் வெளியான RJ பாலாஜியின் "வீட்ல விசேஷம்" பட அப்டேட்! செம்ம டிரெண்டிங்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. 

R j Balaji veetla vishesham Movie trailer update poster

Also Read | “ஒரு சர்ப்ரைஸ் நடிகர்”… ராம் & நிவின் பாலி படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி Tweet

ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார்.

R j Balaji veetla vishesham Movie trailer update poster

இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு ஆர். ஜே பாலாஜியுடன் கௌரவத்தோற்றத்தில் நடிக்கிறார். இந்த ரீமேக் படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என பெயர் வைக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் ரிலீசானது.

R j Balaji veetla vishesham Movie trailer update poster

கோயமுத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்தது. ஜூன் 17 அன்று இந்த படம் உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. வீட்ல விசேஷம் திரைப்படத்தின் டிரைலர் இன்று (மே 25) நடக்கவுள்ள பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டியின் துவக்கத்தின் போது இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது.

R j Balaji veetla vishesham Movie trailer update poster

மேலும் படக்குழு புதிய போஸ்டரை இதற்காக வெளியிட்டுள்ளது. ஊர்வசி கதாபாத்திரம் நிறைமாத கர்ப்பத்துடன் இருப்பது போலவும், பார்ட்டி பின்னணியில் போஸ்டர் அமைந்துள்ளது. ஜூன் 17-ல் பிரசவம் என்றும் எழுதப்பட்டுள்ளது.

Also Read | DON படத்தின் உலகளாவிய வசூல்.. லைக்கா வெளியிட்ட செம தகவல்..மாஸ் காட்டிய சிவகார்த்திக்கேயன்!

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

R j Balaji veetla vishesham Movie trailer update poster

People looking for online information on R J Balaji, Veetla vishesham movie, Veetla vishesham movie trailer, Veetla vishesham Movie trailer updates will find this news story useful.