தமிழில் தற்போது பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், 50 நாட்களைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Also Read | அசீம்கிட்ட இருக்குற பிரச்சனை, Title Winner வாய்ப்பு யாருக்கு?.. குயின்சி ஷேரிங்ஸ்.. ஒருவேளை இருக்குமோ?
இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் தான்.
அதிலும் சில டாஸ்க்குகளில் வெற்றி பெறுவதற்காக போட்டியாளர்கள் ஆவேசமாகவும் செயல்படும் சமயத்தில் மாறி மாறி சிலருக்கு இடையே சண்டையும் வெடித்திருந்தது.
தற்போது சினிமா கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் ஆடி வருகின்றனர். இந்த டாஸ்க் சுற்று, சற்று கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு முன்பு நடந்த ஏலியன் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் நிறைய சண்டைகள் வெடித்திருந்தது. அணிக்குள் கூட சில குழப்பங்கள் ஏற்பட்டு சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.
அடுத்தடுத்து பல்வேறு விவாதங்களும் நடந்து வரும் சூழலில், பார்வையாளர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சி வெளியேறி இருந்தார். இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை குயின்சி அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த பல விஷயங்கள் மற்றும் போட்டியாளர்கள் குறித்து குயின்சி பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜனனியுடன் நடந்த சண்டை குறித்தும், அசல் மாறும் நிவாஷினி ஆகியோர் குறித்தும், விக்ரமன், ஷிவின், அசீம், அமுதவாணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவலை குயின்சி பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் தனது தந்தை ஸ்தானத்தில் வலம் வந்த ராபர்ட் மாஸ்டர் குறித்தும் சில கருத்துக்களை குயின்சி தெரிவித்துள்ளார். தந்தை மகளாக ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் இருந்த நிலையில், ராபர்ட் வெளியேறிய அடுத்த வாரமே குயின்சியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இருவரும் பின்னர் சந்தித்து கொண்ட நிகழ்வுகளும் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றிருந்தது.
இதனிடையே, பிக்பாஸ் வீட்டிற்குள் Love என்ற பெயரில் ராபர்ட் மாஸ்டர் சுற்றிக் கொண்டே இருந்தார். இது தொடர்பாக, உங்க டாடிக்கு (ராபர்ட் மாஸ்டர்) நீங்க அறிவுரை கூறவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த குயின்சி, "நான் வீட்டுக்குள்ளேயே அவருக்கு அட்வைஸ் பண்ணேன். வெளிய வந்ததுக்கு அப்புறம் உன் அப்பா என்ன பண்ணாருன்னு கேட்டா, பொண்ணு நானே லவ் பண்ணாம இருக்கேன். என் அப்பா உள்ள லவ் பண்ணாருன்னு எல்லாம் சொல்லிட்டு இருந்தேன்.
நாம ஒரு கேம்க்கு வந்து இருக்கோம். அதை தாண்டி ஒரு பொழுது போக்கா இருக்குறது இந்த மாதிரி பேசிக்குறது தான். அதுல தான் நாங்க கொஞ்சம் ரிலாக்ஸாவே இருப்போம்" என தெரிவித்தார். அதே போல, பிக்பாஸ் வீட்டில் காதல் பிசாசு யார் என்ற கேள்விக்கும் ராபர்ட் மாஸ்டர் என குயின்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "இம்சை யாரு?.. கொளுத்தி போடுறது இவரு தான்!!".. Open -ஆ சொன்ன குயின்சி.. .. Bigg Boss 6 Tamil