Ant-Man and the Wasp: Quantumania டிஸ்னியின், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஐந்தாவது கட்டத்தில் உள்ள முதல் திரைப்படமாகும். குவாண்டம் சாம்ராஜ்யத்தின் சூப்பர் ஹீரோ படமாகும்.
மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்க Ant-Man and the Wasp: Quantumania நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மார்வெல் யுனிவர்சின் Ant Man கதைக்களத்தில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெய்டன் ரீட் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் பால் ராட், ஸ்காட்/Ant Man ஆகவும், இவாஞ்சலின் லில்லி Hope Van Dyne/ The Wasp ஆகவும், நடிகர் மைக்கேல் ஃபைஃபர் ஜேனட் வான் டைனாகவும், நடிகர் மைக்கேல் டக்ளஸ் ஹாங்க் பைமாகவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நடிகை இவாஞ்சலின் லில்லி பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் படத்தில் நடித்த நடிகர்கள் குறித்தும், இந்தியா குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். "உங்களுக்கு மிகவும் பிடித்த இந்திய உணவு எது?" என்ற கேள்விக்கு, "பட்டர் சிக்கன் என்று சொல்லக் கூடாது என்று நினைத்தேன். ஏனெனில் நான் என்ன நினைக்கிறேன் என்றால் பட்டர் சிக்கன் பிடிக்கும் என்று ஒரு வட அமெரிக்கர் கூறுவது மிகவும் இயல்பானது. அதேபோல் ரொட்டி & நான் கூட. இவைகளை கடந்து ஒரு உணவை சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் பட்டர் சிக்கன் என்று தான் சொல்கிறேன்" என இவாஞ்சலின் லில்லி பதில் அளித்தார்.