ஐதராபாத்: புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஒ அண்ட்டா வா மாவா பாடல் மேக்கிங் BTS வீடியோ வெளியாகி உள்ளது.
சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் 'ஒ அண்ட்டா வா மாவா' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இந்தியா முழுவதும் வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. வீடியோ வெளியான 10 நாளில் 53 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாஸ் ஹிட் அடித்துள்ளது. தமிழில் 19 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தமிழிலும் மாஸ் ஹிட் அடித்துள்ளது.
ஓ சொல்றியா மாமா என தமிழில் இந்த பாடல் அமைந்தது, தமிழ் வரிகளை விவேகா எழுத, நடிகை ஆண்ட்ரியா பாடினார். ஒரு கேளிக்கை விடுதியில் நடனம் ஆடும் பெண், ஆண்களை பற்றி பாடுவதாய் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாட்டிற்கு இந்தியாவின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ளார். இந்த பாடலின் BTS வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் தனது உதவியாளருடன் நடன அசைவுகளை சமந்தா, அல்லு அர்ஜூனுக்கு கற்றுத்தர நடன அசைவுகளை பார்த்து சமந்தா வெட்கப்பட்டு கமெண்ட் செய்யும் BTS வீடியோவாக இது அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 17 ஆம் நாள் புஷ்பா படம் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
நடிகை சமந்தா தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார்.