Veetla Vishesham Mob Others Page USA

விக்ரம் வேதா இயக்குநர்களின் எழுத்தில் பிரம்மிப்பூட்டும் சுழல் வெப் சீரிஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கதிர், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி நடித்துள்ள சுழல்- தி வோர்டெக்ஸ் திரைப்படம் இன்று ஜூன் 17-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிவுள்ளது.

Pushkar gayathri Suzhal: The Vortex series the ultimate maze

சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் ரக படமான இந்த படத்தின் கதை, பிரபல விக்ரம் வேதா திரைப்பட இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதியுள்ளனர். பிரம்மா (குற்றம் கடிதல், மகளிர் மட்டும்) மற்றும் எம்.அணுசரன் (கிருமி) இந்த படத்தை இயக்கியுள்ளனர். ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் இந்த வெப் சீரிஸ் 30+ இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியிடப்பட்டது.

Pushkar gayathri Suzhal: The Vortex is the ultimate maze

இத்திரைப்படம் குறித்து நடிகை ஷ்ரேயா ரெட்டி பேசும்போது, “இயக்குநர்கள் காயதிரி மற்றும் புஷ்கரின் பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன், மதிக்கிறேன், அவர்கள் என்னை அணுகியபோது நிச்சயமாக அந்த வாய்ப்பை தவற விடக்கூடாதென தோன்றியது. அவர்கள் இயக்கிய விக்ரம் வேதா படத்தின் உருவாக்கமும் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுழல் அதே போன்ற பரப்பரப்பான கதையம்சத்தை கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. சுழல் பல வழிகளில் சரித்திரம் படைக்கப் போகிறது.

ஓடிடியில் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்தகைய ஒரு வெளியீட்டை பெற்ற முதல் தமிழ் ஒரிஜினல் தொடர் சுழல் தான். நாட்டில் யாரும் பார்க்காத, கேள்விப்படாத எல்லைகளை இந்த தொடர் கடந்து போகிறது. கதையின் உள்ளம்சம் மிகவும் பரப்பரப்பாகவும் அனைவருடக்கும் தங்களுடன் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இதனை கண்டிப்பாக ரசிப்பார்கள், இதுபோன்ற ஒன்றை கண்டு பிரமிப்பார்கள்.  அமேசான் பிரைம் வீடியோ தளத்தின்  திறனைக் கண்டு, நான் ஆச்சர்யத்தில் மூழ்கினேன். இத்தனை பெரிய வெளியீடாக இதனை வெளியிடுவது  மகிழ்ச்சி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Pushkar gayathri Suzhal: The Vortex is the ultimate maze

மேலும், பேசியவர், “பாகுபலி, ஜெய் பீம் போன்ற படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் - எல்லைகளை கடந்து அனைவருக்கும் நெருக்கமாகும் அழகான படைப்புகள். சுழல் தொடரும் அதே போன்ற வெற்றியை பெறும்.  பாகுபலி பலமான படைப்பாக இருந்தது. அது இதுவரை யாரும் பார்த்திராத உலகம். ஜெய் பீமில் வலுவான உள்ளடக்கம் இருந்தது. அமேசான் பிரைம் வீடியோ சுழலை விளம்பரப்படுத்தும் விதம், அதை எடுத்து ஒரு அற்புதமான கேன்வாஸில் வைப்பது... போல் இருக்கிறது. எல்லோரும் அதைப் பார்க்க விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். சுழல் நிலம் மற்றும் மொழி என எல்லைகளைத் தாண்டும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.” என தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் குறித்து இத்தொடரில் நடித்துள்ள நடிகை, ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், “பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் போன்ற பார்வையாளர்களை மயக்கிய படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்தப் படங்களைப் பார்த்து நான் திரையோடு ஒட்டிக்கொண்டேன், ஆனால் அதே போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பில், இவ்வளவு பெரிய குழு மற்றும் இவ்வளவு பெரிய அமைப்பில் ஒரு பகுதியாக இருக்கும்போது, அது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. சுழல் - தி வோர்டெக்ஸ் வெளியாவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pushkar gayathri Suzhal: The Vortex series the ultimate maze

People looking for online information on Aishwarya Rajesh, Amazon Prime Video, Kathir, Pushkar Gayathri, Radhakrishnan Parthiban, Suzhal The Vortex will find this news story useful.